Athens of the East

0
361

கீழ்திசையின் ஏதென்ஸ் என்று அழைக்கப்பட்ட நகரம். தமிழகத்தின் மிகப் பழமையான நகரம்

 

மதுரை நகரின் தனிச் சிறப்பே, அதன் நகர வடிவமைப்புதான். மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்து அமைக்கப்பட்ட மாட, ஆவணி, மாசி வீதிகளால் இந்தியாவின் மிகச் சிறந்த நகர வடிவமைப்புகளின் பட்டியலில் நம்ம மதுரையும் உள்ளது.
சென்னைக்குப் பிறகு மாநகராட்சி அந்தஸ்து நம்ம மதுரைக்கு தாங்க. சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மதுரையில் வசிக்கின்றனர். மதுரைக்கு தினந்தோறும் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை, இந்த எண்ணிக்கையில் பாதியாகும். 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக நம்ம  மதுரை நகரம் உள்ளது. நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. பல கோவில்கள் மிகவும் பழமையான பின்னணியைக் கொண்டவை. வடக்கு மாசி வீதியில் உள்ள செல்லத்தம்மன் கோவில், மேல மாசி வீதியில் உள்ள நக்கீரர் கோவில் ஆகியவை வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை

 

சிறந்த போக்குவரத்து வசதி, நல்ல கல்விச் சூழ்நிலை, வளர்ந்து வரும் தொழில் துறை, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மருத்துவ வசதிகள், மணம் வீசும் மல்லிகைப் பூ வர்த்தகம், பேர் சொல்லும் சுங்கிடிச் சேலைகள், நம்மளை மற்றும் அல்ல நம் மனதையும் சேர்த்தே குளிரூட்டும் நம்ம பேமஸ் ஜிகர்தண்டா இப்படி என மதுரைக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்..

 

Comments

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here